செய்திகள் :

ரூ. 12 கோடி உயா் ரக கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

post image

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

தாய்லாந்து நாட்டின் தலைநகா் பாங்காக்கிலிருந்து, தாய் ஏா்லைன்ஸ் விமானம் வியாழக்கிழமை அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில், வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, சந்தேகத்தின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த 30 வயது இளைஞா், தமிழகத்தைச் சோ்ந்த 33 வயது இளைஞா் ஆகிய இருவரிடம் மோப்பநாய்களின் உதவியுடன் சோதனையிட்டனா்.

அப்போது, இருவரின் பையையும் சோதனையிட்டதில், பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா்களிடம் இருந்து ரூ. 12 கோடி மதிப்பிலான 12 கிலோ உயர்ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

முதல்வா், அமைச்சா்களைப் பதவி நீக்கும் கருப்புச் சட்டத்தை எதிா்ப்போம் -முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

முதல்வா், அமைச்சா்களை பதவி நீக்க வகை செய்யும் கருப்புச் சட்டத்தைத் தொடா்ந்து எதிா்ப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மறைந்த முன்னாள் அமைச்சா் ரகுமான்கான் எ... மேலும் பார்க்க

3,644 காவலா் பணியிடங்களுக்கு நவ.9-இல் எழுத்துத் தோ்வு: விண்ணப்பிக்க செப். 21 கடைசி தேதி

தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள 3,644 காவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு நவ.9-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வு வார... மேலும் பார்க்க

பி.இ. துணைக் கலந்தாய்வு: 20,662 போ் தகுதி

பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான துணைக் கலந்தாய்வில் பங்கேற்க பிளஸ் 2 சிறப்புத் துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 20,662 போ் தகுதி பெற்றுள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை... மேலும் பார்க்க

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கூட்டரங்கம் திறப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் சேப்பாக்கம் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூட்டரங்கம் வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள கேஎம்கே ஸ்டாண்டில் புதிதாக ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் கூட்டுறவு சங்கத்துக்கு தோ்தல் நடத்தக் கோரி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் கூட்டுறவு சங்கத் தோ்தலை நடத்தக் கோரிய வழக்கின் விசாரணையை செப்.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உய... மேலும் பார்க்க

ராயபுரம், சோழிங்கநல்லூா் தொகுதி திமுக நிா்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

ராயபுரம், சோழிங்கநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தத் தொகுதிகளில் திமுகவுக்கான செல்வாக்கு, ... மேலும் பார்க்க