விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
ரூ.25 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
நாட்டறம்பள்ளி அருகே அக்ராகரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் ரூ.25 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்ட எம்எல்ஏ.தேவராஜி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
திருப்பத்தூா் மாவட்டம் , நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிலும், இங்கு பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் என மக்கள் எம்எல்ஏ. தேவராஜிடம் கோரிக்கை வைத்தனா்.
இதையடுத்து எம்எல்ஏ க.தேவராஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை கட்ட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து ஞாயிற்றுகிழமை பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜோலாா்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடை அமைக்க பணிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் இந்திரவா்மன்,சக்திபாண்டி புகழேந்தி மற்றும் கிராம மக்கள் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க ஏதுவான இடம் உள்ளதா என அதிகாரிகளுடன் எம்எல்ஏ க.தேவராஜி ஆய்வு மேற்கொண்டாா்.