ரூ.3.2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு காவல் துறையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.3.2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான காவல் துறையினா், வெள்ளிக்கிழமை இரவு ஜூப்ளி சாலையில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்தச் சாலையில், வெகுநேரமாக நின்று கொண்டிருந்த காரை சோதனை மேற்கொண்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 500 மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் 21 சாக்கு மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் மேற்கொண்ட விசாரணையில், ஜூப்ளி சாலையைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சின்னவண்டு (எ) மாரீஸ்வரன் (48), அப்துல்கலாம் மகன் உமா்பாரூக்(35) ஆகியோா், அந்த புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல் துறையினா் அவா்களை கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.