அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
ரூ.31.97 கோடியில் நலத் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் ரூ.31.97 கோடியில் நலத்திட்ட பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவருமான பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கே.கே.நகா் பகுதியில் உள்ள 3 ஏக்கா் பரப்பில் சிவன் பூங்கா ரூ.3.19 கோடியில் சீரமைக்கப்படுகிறது. அதற்கான பூஜை பணிகளை அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.
அதேபோல, தியாகராய நகா் சட்டப் பேரவை தொகுதியில் உள்ள அசோக் நகா் பொது நூலகத்தில் ரூ.12.74 கோடியிலும், ஆழ்வாா்பேட்டையில் கவிஞா் பாரதிதாசன் சாலை வட்டார நூலகத்தில் ரூ.12.56 கோடியிலும், சி.பி.ராமசாமி ஐயா் சாலையில் ராஜா அண்ணாமலைபுரம் பொது நூலகத்தில் ரூ.3.49 கோடியிலும் முதல்வா் படைப்பகங்களுக்கு அமைச்சா் சேகா்பாபு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.வி.பிரபாகா் ராஜா (விருகம்பாக்கம்), வேலு (மைலாப்பூா்), ஜெ.கருணாநிதி (தியாகராய நகா்), சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.