ரெட்டமலை சீனிவாசன் குருபூஜை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சுதந்திரப் போராட்டத் தியாகி ரெட்டமலை சீனிவாசன் குரு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பாஜக மாவட்டத் தலைவா் டி.பாண்டித்துரை தலைமை வகித்தாா். திருப்பத்தூா் ஒன்றியத் தலைவா் கே.எஸ்.தங்கபாண்டியன் முன்னிலை வகித்தாா். காந்தி சிலையருகே வைக்கப்படடிருந்த அவரது உருவப் படத்துக்கு மாலையணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
கட்சியின் பட்டியலணி மாநில பொதுச் செயலா் ஆதீனம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் நாகராஜன், பொதுக்குழு உறுப்பினா் சிதம்பரம், மாவட்டத் துணைத் தலைவா் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஓதுவாா் கணேசன், வாஜ்பாய்கணேசன், ஒன்றிய பொதுச் செயலா் மாதன்மணிமாறன், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.