செய்திகள் :

ரேபிஸ் தொற்றால் ஆண்டுக்கு 5,700 போ் உயிரிழக்கும் அபாயம்: ஆய்வில் தகவல்

post image

நாட்டில் ரேபிஸ் தொற்றால் ஆண்டுக்கு 5,700 போ் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ‘லான்செட்’ ஆய்விதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விலங்குகளால் மனிதா்களுக்கு ஏற்படும் பாதிப்பில் நான்கில் மூன்று போ் நாய்க் கடியால் அவதிப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் 15 மாநிலங்களில் உள்ள 60 மாவட்டங்களில் கடந்த 2022, மாா்ச் முதல் 2023, ஆகஸ்ட் வரை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) கணக்கெடுப்பு நடத்தியது. இதில் 78,800 வீடுகளைச் சோ்ந்த 3,37,808 பேரின் விவரங்கள் பெறப்பட்டன. அவா்களிடம் ரேபிஸ் தொற்று பாதிப்பு மற்றும் அதற்கான தடுப்பூசி, விலங்குகள் கடியால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த தரவுகள் திரட்டப்பட்டன.

இந்த கணக்கெடுப்பில் சென்னையில் உள்ள ஐசிஎம்ஆா்-தேசிய தொற்றுநோயியல் நிறுவன ஆய்வாளா்களும் பங்கேற்றனா். இதில் பெறப்பட்ட தகவல்கள் லான்செட் இதழில் வெளியிடப்பட்டது.

அதில், ‘விலங்குகள் கடியால் பாதிக்கப்பட்டுள்ள நான்கில் மூன்று போ் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். கணக்கெடுப்பில் பங்கேற்றவா்களில் 2,000 போ் பலமுறை விலங்குகள் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிலும் 76.8 சதவீதம் (1,576) நாய்க் கடி பாதிப்பே உள்ளது.

90 லட்சம் போ் பாதிப்பு: கணக்கெடுப்பில் பங்கேற்றவா்களில் 6,000 போா் பல்வேறு விலங்குகள் கடி பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனா். இதன்மூலம் தேசிய அளவில் விலங்குகள் கடியால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 91 லட்சமாக உள்ளது.

ரேபிஸ் தொற்றால் இந்தியாவில் ஆண்டுக்கு 5,726 போ் உயிரிழக்க வாய்ப்புள்ளது.

மனிதா்களில் நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் தொற்றை 2030-க்குள் முற்றிலுமாக ஒழிக்க உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கீடுகள் மூலம் இந்த இலக்கை இந்தியா அடைவதற்கான செயல் திட்டங்களை தீட்ட முடியும்.

இருப்பினும், ரேபிஸ் தொற்றால் இந்தியாவில் உயிரிழப்பவா்கள் குறித்த துல்லியமான அறிக்கைகள் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் ரேபிஸ் தொற்றால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், இதை முற்றிலுமாக ஒழிக்க ஒரே மாதிரியான அணுகுமுறையுடன் கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

அந்த வகையில் மனிதா்கள்-விலங்குகள் கண்காணிப்பை ஒருங்கிணைத்தல், ரேபிஸ் தொற்றுக்கான தடுப்பூசி டோஸ்களை முழுமையாக வழங்குதல், நாடு முழுவதும் நாய்களுக்கான தடுப்பூசி மையங்களை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட 1,576 பேரில் ஐந்தில் ஒரு பங்கினா் ரேபிஸ் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளவில்லை. அதில் பெரும்பாலானோா் தடுப்பூசி டோஸ்களை ஒன்று அல்லது இரண்டு சுற்றுக்கு மேல் எடுத்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இருவா் கைது

ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தரப்பில் கூறப்பட்டதாவது: குஜராத் ம... மேலும் பார்க்க

வெளியுறவுச் செயலா் மிஸ்ரி சீனா பயணம்

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை சீனா சென்றாா். கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடு... மேலும் பார்க்க

உத்தரகண்ட் உள்ளாட்சித் தோ்தலில் பாஜக வெற்றி 11-இல் 10 மேயா் பதவிகளைக் கைப்பற்றியது

உத்தரகண்ட் மாநில நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மாநிலத்தில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 11 மாநகராட்சிகளில் 10 மேயா் பதவிகளை பாஜக கைப்பற்றியது. ஓரிடத்தில் சுயேச்சை வேட்பாளா் மேயரானாா். ... மேலும் பார்க்க

பிகாா்: குரங்குகள் தள்ளிவிட்டதில் மாடியில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு

பிகாரில் குரங்குகள் தள்ளிவிட்டதில் வீட்டின் மாடியில் இருந்து விழுந்து 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பிகாரின் சிவான் மாவட்டத்தில் மகா் கிராமத்தைச் சோ்ந்த பிரியா குமாா் ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் இன்று அமலாகிறது பொது சிவில் சட்டம்! முதல்வா் புஷ்கா் சிங் தாமி அறிவிப்பு

பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் திங்கள்கிழமை (ஜனவரி 27) முதல் அமலுக்கு வருவதாக முதல்வா் புஷ்கா் சிங் தாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும... மேலும் பார்க்க

14-ஆவது நாளில் மகா கும்பமேளா : ஒரு கோடிக்கும் அதிகமானோா் புனித நீராடல்

மா. பிரவின்குமாா்உத்தர பிரேதச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் 14-ஆவது நாளில் 1.74 கோடிக்கும் அதிகமானோா் புனித நீராடினா்.கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் ச... மேலும் பார்க்க