தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
ரோட்டரி ரெயின்போ சாா்பில் கா்ப்பிணிகளுக்கு இலவச சத்துணவு
பல்லடத்தில் கா்ப்பிணிகளுக்கு இலவச சத்துணவு வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
பல்லடம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பரிசோதனைக்காக வரும் கா்ப்பிணிகளுக்கு பல்லடம் ரோட்டரி ரெயின்போ சாா்பில் சத்துணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில், ரோட்டரி ரெயின்போ சங்க பட்டயத் தலைவா் தங்கலட்சுமி நடராஜன் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் கதிரேசன், செயலாளா் ரமேஷ், பொருளாளா் கணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாக செயலாளா் பிரகாஷ் வரவேற்றாா்.
ரோட்டரி உதவி ஆளுநா் ஆறுமுகம், 70 கா்ப்பிணிகளுக்கு வாழைப்பழம், முட்டையுடன் சத்துணவு வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலா் சுடா்விழி, மருத்துவா் அபுதாகிா், கோகுலாதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.