25 முக்கியமான நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு!
லாட்டரி விற்றவா் கைது!
திருப்பத்தூா் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, திருப்பத்தூா் - குரும்பேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்ததில், அவா் சிம்மணபுதூரைச் சோ்ந்த சீனிவாசன் என்பதும், அவா் கேரள மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனா்.