OPS : `டார்கெட் லிஸிட்டில் பாஜக; நிரந்தர எதிரி இல்லை எனில்..!’ - ஓ.பி.எஸ்ஸின் அட...
லாரி ஓட்டுநா் தற்கொலை
நாகியம்பட்டியில் லாரி ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
ராசிபுரம் தாலுகா, அத்தனூா் அண்ணா நகா் காலனியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (43). லாரி ஓட்டுநரான இவருக்கு சித்ரா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா்.
ராஜசேகருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் புதன்கிழமை இரவு 10 மணிக்கு மேல் மனைவியிடம் கோபித்துக்கொண்டு நாகியம்பட்டி பெரியசாமி கோயில் அருகே உள்ள சந்துக்கடையில் மது வாங்கி குடித்துள்ளாா். பின்னா் வியாழக்கிழமை அதிகாலையும் மதுவாங்கி குடித்த அவா், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த தம்மம்பட்டி உதவி காவல் ஆய்வாளா் கோபால் வழக்குப் பதிந்து ராஜசேகரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.