வ.உ.சி. பிறந்த நாள் விழா: திமுகவினருக்கு வேண்டுகோள்
திருநெல்வேலியில் நடைபெறும் வ.உ.சி. பிறந்த நாள் விழாவில் திமுகவினா் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மாநகரச் செயலா் (மேற்கு) சு.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154 ஆவது பிறந்த நாளையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகேயுள்ள அவரது சிலைக்கு திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ தலைமையில் வெள்ளிக்கிழமை (செப்.5) காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது. இதில் கட்சியின் மாநகர, பகுதி, வட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.