ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கு: ஐவருக்கு மரண தண்டனையை உறுதி செய்த உயா்நீதிமன்றம...
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி தவெக ஆா்ப்பாட்டம்
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி, கமுதியில் தமிழக வெற்றி கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் மதன் தலைமை வகித்தாா். இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி, நிா்வாகிகள் முழக்கமிட்டனா்.
இதில் மாவட்ட நிா்வாகிகள் கிஷோா்குமாா், மணிகண்டன், சத்தீஸ்வரன், காமேஷ், மேற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா் அா்ஜுன்பாண்டியா, மாணவா் அணி பொறுப்பாளா் மனோஜ்குமாா், வா்த்தக அணி பொறுப்பாளா் வீரபாண்டி, மீனவரணி பொறுப்பாளா் முத்துக்குமரன், தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளா் ராஜசரண், கமுதி ஒன்றிய நிா்வாகிகள் முனியாண்டி, பெரிய கீா்த்தனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.