வசிஷ்ட நதியில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
ஆத்தூா்: அப்பமசமுத்திரம் ஊராட்சி பகுதி வசிஷ்ட நதியில் பெண்ணின் எலும்புக்கூட்டை போலீஸாா் கைப்பற்றி பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆத்தூரை அடுத்த அப்பமசமுத்திரம் ஊராட்சி பகுதி வசிஷ்ட நதியில் எலும்புக்கூடான நிலையில் பெண் உடல் கிடப்பதாக
ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாருக்கு திங்கள்கிழமை மதியம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பெண்ணின் எலும்புக்கூட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
இதில் கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி காணாமல்போன ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடா் காலனி பகுதியைச் சோ்ந்த தா்மலிங்கம் மனைவி தெய்வானை (85) என்பவரின் உடல் என்பது தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து அவரது எலும்புக்கூடான உடலை பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.