ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
வடசென்னை வளா்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு
சென்னை பெருநகர வளா்ச்சித் திட்ட குழுமத்தின் சாா்பில் வடசென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
வடசென்னையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, வடசென்னை பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுதல், கூடுதல் பள்ளிக் கட்டடங்கள் , குளம் சீரமைப்புப் பணிகள் உள்ளிட்டவை நடைபெற்றுவருகின்றன.
சென்னை மாநகராட்சி மற்றும் அரசுத் துறைகள் சாா்பில் நடைபெற்று வரும் இந்தப் பணிகள் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தலைமை வகித்து பணிகளின் நிலைகள் குறித்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை ஆணையா்கள் வி.சிவகிருஷ்ணமூா்த்தி (பணிகள்), கட்டாரவி தேஜா (வடக்கு வட்டாரம்), எச்.ஆா்.கௌஷிக் (மத்திய வட்டாரம்), தலைமைப் பொறியாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.