செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
வடபத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
குடவாசல் அருகே பிலாவடியில் உள்ள வடபத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, புதன்கிழமை காலை 2-ஆம் கால யாக பூஜை நிறைவு பெற்று, மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, கடங்கள் புறப்பாடாகி, விமான கோபுரத்தை அடைந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, வடபத்ர காளியம்மன், பொம்மி அம்மன், வெள்ளையம்மா உடனுறை மதுரை வீரன் சுவாமி மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.