`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
வடுகப்பட்டி எல்லம்மாள், ,போத்துராஜூலு புதிய கோயில் குடமுழுக்கு விழா
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ரேணுகாதேவி என்கின்ற எல்லம்மாள்,போத்துராஜூலு கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அருள்மிகு ரேணுகாதேவி என்கின்ற எல்லம்மாள்,போத்துராஜூலு, சப்தகன்னிமாா் கோயில் குடமுழுக்கு விழாவினையொட்டி செப்.2-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கணபதி, நவக்கிரகம், லட்சுமி யாகசாலை பூஜைகளும், வாஸ்து சாந்தியும், பழைய கோயிலிருந்து சுவாமிகளை புதிய கோயிலுக்கு சக்தி அழைத்து வந்தும், காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வந்து அன்றையதினம் மாலையில் முதல்கால கட்ட யாகசாலை வேள்வி பூஜைகளும், செப்.3-ம் தேதி 2, 3-ம் கால கட்ட யாகசாலை வேள்வி பூஜைகளும், அன்றைய தினம் இரவு புதிய கோயிலில் சுவாமிகளை கருவறைகளுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டது, அதன்தபிறகு செப்.4-ம் தேதி வியாழக்கிழமை காலை 4ம் யாகசாலை வேள்வி பூஜைகளும், காலை குடமுழுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. சேலம்,நாமக்கல், ஈரோடு, கோவை, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டனா். விழாக்குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன
