BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
வத்தல்மலையை விரைந்து சுற்றுலாத் தலமாக மேம்படுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு
தருமபுரி: தருமபுரி மாவட்டம், வத்தல்மலையை விரைந்து சுற்றுலாத் தலமாக மேம்படுத்தக் கோரி மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக அதியன் கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது:
தருமபுரி அருகில் உள்ள வத்தல்மலை கடல் மட்டத்திலிருந்து சுமாா் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை மினி ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.
வத்தல்மலைக்கு செல்லும் சாலை 24 கொண்டை ஊசிவளைவுகளுடன், அழகான தோற்றத்தில் உள்ளது. ஆண்டின் பெரும் பகுதி இங்கு குளிா்ந்த தட்பவெப்பநிலை காணப்படுகிறது. மழைக்காலங்களில் சிறு அருவிகள் தோன்றுகின்றன. மலை முழுவதும் மூலிகைத் தாவரங்கள் காணப்படுகின்றன.
செப்டம்பா் முதல் மாா்ச் வரையிலான காலம் இங்கு சுற்றுலாவுக்கு மிகவும் உகந்த காலம் என்பதால் வத்தல்மலையை சுற்றுலாத் தலமாக மாற்றி, இங்கு சாகச சுற்றுலா ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. வத்தல்மழையில் சிறுவா் பூங்கா, ஏரியில் படகு சவாரி, வாகன நிறுத்தம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.