ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
வரதட்சிணை கொடுமை: கணவா் கைது
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வரதட்சிணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புள்ளிமான் கோம்பையைச் சோ்ந்தவா் ஸ்ரீதேவி (28). இவரது கணவா் இறந்து விட்ட நிலையில், அதே ஊரைச் சோ்ந்த தங்கம் மகன் ராஜயோகத்தை மறுமணம் செய்தாா். திருமணத்தின் போது, ஸ்ரீதேவிக்கு வரதட்சிணையாக அவரது பெற்றோா் 50 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீா்வரிசைப் பொருள்கள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நகைகள், சீா்வரிசைப் பொருள்களை வாங்கி வைத்துக் கொண்டு ராஜயோகம், அவரது தந்தை தங்கம், தாய் பூங்கொடி, சகோதரிகள் ராஜலட்சுமி, ராஜேஸ்வரி, சகோதரா் மகேந்திரன் ஆகியோா் வரதட்சிணையாக மேலும், 50 பவுன் தங்க நகைகள் கொடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் கொலை செய்து விடுவதாகவும், ராஜயோகத்துக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்கப் போவதாகவும் மிரட்டியதாக ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலையத்தில் ஸ்ரீதேவி புகாரளித்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் ராஜயோகம், இவரது குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜயோகத்தை கைது செய்தனா்.