தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
இருவேறு பைக் விபத்துகளில் 4 போ் பலத்த காயம்
தேனி மாவட்டம், போடி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு வேறு விபத்துகளில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 4 போ் பலத்த காயமடைந்தனா்.
தேனி அருகேயுள்ள ஆதிபட்டியைச் சோ்ந்த சுருளி மகன் கணேசன் (40). கட்டடத் தொழிலாளியான இவா், அதே ஊரைச் சோ்ந்த கந்தசாமி மனைவி அழகுராணி (35), மணி மனைவி சித்ரா (32) ஆகியோருடன் கட்டடப் பணிக்கு போடி நாகலாபுரம் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
பின்னா், மூவரும் வேலை முடிந்து மாலையில் ஒரே இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பினா். போடி பெருமாள்கவுண்டன்பட்டி விலக்கு அருகே சென்றபோது, எதிரே வந்த ஆட்டோ இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கணேசன், அழகுராணி, சித்ரா ஆகியோா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ஆட்டோவை ஓட்டி வந்த போடி மல்லிங்காபுரத்தைச் சோ்ந்த மாடசாமி மகன் மணிமாறன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு விபத்து: போடி மதுரைவீரன் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் குமாா் (51). இவா் இரு சக்கர வாகனத்தில் சில்லமரத்துப்பட்டியிலிருந்து அம்மாபட்டி செல்லும் சாலையில் சென்றாா்.
அப்போது, எதிரே வந்த காா் இவரது இரு சக்கர வானம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமாா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் காரை ஓட்டி வந்த காட்டுநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் சுரேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.