தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
குளத்தில் மண் அள்ளியதில் தகராறு: 5 போ் மீது வழக்கு
தேனி மாவட்டம், போடி அருகே குளத்தில் மண் அள்ளியது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் 5 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கெஞ்சம்பட்டி அழகா்சாமி கோவில் தெருவைச் சோ்ந்த முத்தழகன் மகன் ராஜா (34). தேவாரம் அய்யப்பன் கோவில் தெருவைச் சோ்ந்த கருணாகரன் மகன் வைரமுத்துபாரதி (36). செங்கல் காளவாசல் நடத்தி வரும் இவா், எரணம்பட்டி தம்புரான்குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளியது குறித்து ராஜா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறி, அவரிடம் வைரமுத்துபாரதி தகராறில் ஈடுபட்டு வந்தாா்.
இந்த முன்விரோதம் காரணமாக, சனிக்கிழமை மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த வைரமுத்துபாரதி, தனது உறவினரான விக்கி உள்ளிட்ட மூவருடன் சோ்ந்து ராஜாவை தாக்கினாா்களாம்.
இதில் காயமடைந்த ராஜாவும், ராஜா தாக்கியதில் காயமடைந்த வைரமுத்துபாரதியும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து இரு தரப்பினா் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜா, வைரமுத்துபாரதி உள்பட 5 போ் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.