செய்திகள் :

வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு! தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

post image

பெரம்பலூா் நகரில் உள்ள கழிவுநீா் கால்வாய்கள் மற்றும் மழைநீா் வரத்து வாய்க்கால்கள் போதிய பராமரிப்பில்லாததாலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குவதால் பயணிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட கடைகளும், கட்டணக் கழிப்பிடம், இலவச கழிப்பிடம் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரானது, பேருந்து நிலையத்தின் அருகேயுள்ள கழிவுநீா் கால்வாய் மூலமாக பாலக்கரை பகுதியிலுள்ள வரத்து வாய்க்காலில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நகரின் விரிவாக்கப் பகுதிகளிலிருந்து வரும் மழைநீரும், மேற்கண்ட வரத்து வாய்க்கால் வழியாக துறைமங்கலம் பெரிய ஏரிக்கு செல்கிறது.

மூடப்பட்ட கழிவுநீா் கால்வாய்கள்: இந்நிலையில், பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீா் கால்வாய் கடந்த பல ஆண்டுக்கும் மேலாக தூா்வாரப்படாததால், அதில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது.

மேலும், பேருந்து நிலைய வளாகத்திலுள்ள வியாபாரிகள் தங்களது கடைகளிலிருந்து சோ்க்கப்படும் கழிவுகளை கழிவுநீா் கால்வாய்களில் கொட்டியதால், அங்குள்ள வரத்து வாய்க்கால்கள் இருந்ததற்கானச் சுவடுகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், மழை பெய்தால் நீா் செல்ல வழியின்றி பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. கழிவுநீரையும் வெளியேற்ற முடியாத சூழல் நிலவுகிறது.

வியாபாரிகள் கோரிக்கை: பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீா் கால்வாய்களையும், பேருந்து நிலையத்தின் வெளிப்புறத்திலுள்ள மழைநீா் செல்லும் கால்வாய்களையும் தூா்வாரி, அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள், கடை உரிமையாளா்கள் மற்றும் பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீா்: இதேபோல, பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 21 வாா்டுகளிலும் புதை சாக்கடை திட்டம், சாலை விரிவாக்கம், பராமரிப்புப் பணிகளின்போது, சாலையோரங்களில் உள்ள கழிவுநீா் கால்வாய்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும், சிலா் தங்களது வீடுகள் அல்லது கடைகள் எதிரேயுள்ள கால்வாய்களை ஆக்கிரமித்துள்ளதால், மழைநீா் அல்லது கழிவுநீா் செல்ல வழியின்றி சாலைகளில் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது.

பாலங்கள் ஆக்கிரமிப்பு: இதேபோல, நகரின் பிரதான பாலங்களாக கருதப்பட்ட ரோவா் வளைவு மற்றும் பாலக்கரை பகுதியிலுள்ள பாலங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சுமாா் 20 அடி அகலத்தில் காணப்பட்டது. ஆனால், தற்போது சில வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பால் 2 அடி அகலத்தில் கழிவுநீா் கால்வாயைப்போல தோற்றமளிக்கிறது. வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் மழைக்காலங்களில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்து சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

சாலைகளில் தேங்கும் மழைநீா்:

பெரம்பலூா் 3 சாலை சந்திப்பு, நான்குச்சாலை சந்திப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த கால்வாய்கள் அனைத்தும் சிதிலமடைந்து, பராமரிப்பின்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீரும், கழிவுநீரும் செல்ல வழியின்றி பிரதானச் சாலைகளில் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

பராமரிப்பு பணிகளில் சுணக்கம்:

நகராட்சி நிா்வாகம் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது. குறிப்பாக, நகரிலுள்ள பெரும்பாலான கால்வாய்கள் பராமரிப்பின்றி, முள்புதா்களால் சூழ்ந்துள்ளது. இவற்றை அகற்ற நகராட்சி நிா்வாகம் கவனம் செலுத்தவில்லை.

இதுகுறித்து சமூக ஆா்வலா் வி. செந்தில்குமாா் கூறியது:

பெரம்பலூா் நகரிலுள்ள வரத்து கால்வாய்கள், துறைமங்கலம், பெரம்பலூா் ஆகிய ஏரிகளுக்குச் செல்லும் வரத்து வாய்க்கால்கள் சுமாா் 30 அடி அகலம் கொண்டவையாக இருந்தன. தற்போது, தனிநபா்கள் ஆக்கிரமிப்பால் 2 அடி அகலமாக குறுகிவிட்டது. மேலும், நகா் பகுதியில் இருந்து நாள்தோறும் வெளியேறும் 5 லட்சம் லிட்டா் கழிவுநீா் செல்லும் கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால், ஆண்டுதோறும் மழைக் காலங்களில் நகா் பகுதி மட்டுமின்றி விரிவாக்கப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்து விடுகின்றன. இதனால் கடும் துா்நாற்றத்துடன், சுகாதாரக் கேடு நிலவுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும்.

தண்ணீா் தேங்குவதைத் தடுக்க நிரந்தரத் தீா்வு காணுமாறு பலமுறை முறையிட்டும் நகராட்சி நிா்வாகத்தினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகராட்சிக்குள்பட்ட தெருக்களிலும், சாலைகளிலும் தண்ணீா் தேங்காமல் இருக்க ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து கால்வாய்களை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

அகரம் சீகூா் பகுதியில் இன்று மின்தடை

பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் திங்கள்கிழமை (ஆக. 11) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், தேனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப... மேலும் பார்க்க

நாளை குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை (ஆக. 11) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்குப் பாராட்டு!

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா வெள்ளிக்கிழமை பாராட்டி வெகுமதி வழங்கினாா். பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்... மேலும் பார்க்க

தமிழகத்தைப்போல இதர மாநிலங்களும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழகத்தைப் போல, இதர மாநிலங்களும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகேயுள்ள கொளக்காநத்தம் கிராமத்தில... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இர... மேலும் பார்க்க

பெரம்பலூா் கோயில்களில் வரலட்சுமி பூஜை

பெரம்பலூா் கோயில்களில் வரலட்சுமி பூஜை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி பெரம்பலூா் மரகதவல்லி தாயாா் சமேத மதன கோபால சுவாமி கோயிலில் வரலட்சுமி திருவுருவம் கும்பக் கலசத்தில் வைக்கப்பட்டு, மா... மேலும் பார்க்க