வரலாற்றுச் சாதனை படைத்த கேரள வீரரை பாராட்டிய சசி தரூர்!
ரஞ்சி அரையிறுதியில் சதமடித்த முகமது அசாரூதினை கேரள எம்.பி. சசி தரூர் கேரளாவின் புதிய நட்சத்திரம் எனப் பாராட்டியுள்ளார்.
ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கேரளா, குஜ்ராத் அணிகள் மோதுகின்றன. இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடும் கேரள அணி 2ஆம் நாள் முடிவில் 418/7 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் முகமது அசாரூதின் 149* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். ரஞ்சி அரையிறுதியில் சதமடித்த முதல் கேரள வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில், கேரள கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவு அளித்துவரும் காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரள மக்களவை உறுப்பினருமான சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
புதிய நட்சத்திரம்
ரஞ்சி அரையிறுதியில் சதமடித்த கேரளாவின் புதிய நட்சத்திரம், இளம் முகமது அசாரூதினை நினைத்து பெருமையாக இருக்கிறது. தனது இயல்பான அதிரடி பேட்டிங்கினை கட்டுப்படுத்தி அற்புதமாக விளையாடியது கேரள அணிக்கு எதிரணியினர் எட்டிப்பிடிக்க முடியாத நல்ல வலுவான ஸ்கோரை அளித்துள்ளது.
அரைசதமடித்த சல்மான் நிஜார், சச்சின் பேபிக்கு வாழ்த்துகள். தொடந்து முன்னேறுங்கள், கேரளா! எனக் கூறியுள்ளார்.
303 பந்துகளில் 149 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 17 பவுண்டரிகள் அடங்கும். இந்தப் போட்டியில் இவர் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
So proud of young Mohammed Azharuddeen, Kerala’s newest Cricket star, on his sterling century against Gujarat in the #RanjiTrophy semifinal. He curbed his natural attacking instincts to produce an outstanding knock that may put Kerala’s total beyond the reach of their… pic.twitter.com/8tHB1auC5x
— Shashi Tharoor (@ShashiTharoor) February 18, 2025