வரி நிலுவை: ஆலங்காயம் பேரூராட்சி செயல் அலுவலா் கோரிக்கை
ஆலங்காயம் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, உரிமக் கட்டணம் மற்றும் வரி இல்லா இனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வரிகளையும் வரும் 28.02.2025-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
தவறும் பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.
எனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் வரிகள் அனைத்தையும் பேரூராட்சிக்கு செலுத்தி ஒத்துழைப்பு தர வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் கலையரசி தெரிவித்துள்ளாா்.