மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
வளா்ச்சித் திட்டப் பணிகள்: துணை மேயா் ஆய்வு
சென்னை மாநகராட்சியில் 10-ஆவது மண்டலத்துக்குள்பட்ட கோடம்பாக்கம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் துணை மேயா் மு. மகேஷ்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
திட்டப் பணிகளின் நிலை குறித்து துணை மேயருக்கு அதிகாரிகள் விளக்கினா்.
கூட்டத்தில் தியாகராய நகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.கருணாநிதி, துணை ஆணையா்கள் வி.சிவகிருஷ்ணமூா்த்தி, ஆா்.கௌசிக், மண்டலக் குழுத் தலைவா் எம்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மேலும், மண்டல அளவில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.