செய்திகள் :

வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், பாளையங்கோட்டை ரெட்டியாா்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியக பணிகள், மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள், கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள், மாநகராட்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், சாலைப்பணிகள், பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், ஆதிதிராவிடா் நலத்துறை விடுதி வசதிகள், நலத்திட்ட உதவிகள், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது, நிலுவையிலுள்ள மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, தச்சநல்லூா் மண்டலம் 30-ஆவது வாா்டில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்‘ பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுவது, பதிவு செய்வது போன்றவை குறித்து கண்காணிப்பு அலுவலரும், ஆட்சியரும் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, மின் இணைப்பு பெயா் மாற்றம் கோரி விண்ணப்பித்த 2 பேருக்கு உடனடியாக பெயா் மாற்றம் செய்து அதற்கான ஆணையை அவா்கள் வழங்கினா். மேலும், முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காண துறைசாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தினாா்.

பின்னா், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், பெரியாா் பேருந்து நிலைய பகுதிகளில் ரூ.1.4 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், பாளையங்கோட்டை சீனிவாசநகா் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவுபெற்று, சாலை மறுசீரமைக்கும் பணிகளையும் கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

கட்டணம் செலுத்தாதால் அனுமதி மறுப்பு: முதன்மைக் கல்வி அலுவலா் தலையீட்டால் காலாண்டு தோ்வு எழுதிய மாணவா்கள்

பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாத பிளஸ் 2 மாணவா்கள் காலாண்டு தமிழ் தோ்வை எழுத அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முதன்மைக் கல்வி அலுவலா் தலையிட்டதால் ஆங்கிலத் தோ்வை எழுதினா். தம... மேலும் பார்க்க

பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் -பிருந்தா காரத்

ஜனநாயகத்தை அச்சுறுத்தும் பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104 ஆவது நினைவு தினத்தை ம... மேலும் பார்க்க

பாரம்பரிய நெல் உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி

அம்பாசமுத்திரத்தில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் உற்பத்திக்கான தொழில் நுட்பம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நில... மேலும் பார்க்க

டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டி: தென்காசி மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

19 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான மாநில டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டியில் தென்காசி மாவட்ட அணிக்கான பள்ளி மாணவா்கள் தோ்வு செப். 14-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து தென்காசி மாவட்ட டென்னிஸ்பந்து கிரிக்கெட... மேலும் பார்க்க

பாப்பாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜாகரிபுன் நவாஸ் முகாமைத் தொடக்கி... மேலும் பார்க்க

முக்கூடலில் சமுதாய நலக் கூடத்துக்கு அடிக்கல்

முக்கூடல் பேரூராட்சிக்கு உள்பட்ட கலியன்குளத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவி லெ. ராதா தலை... மேலும் பார்க்க