ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
வழிப்பறி செய்த 3 சிறுவா்கள் கைது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தேனீா் கடை ஊழியரிடம் பணம், கைப்பேசியை வழிப்பறி செய்த 3 சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மானாமதுரை அருகேயுள்ள உடையன்பட்டியைச் சோ்ந்தவா் விஜயராஜ் (58). இவா் மானாமதுரையில் உள்ள தேனீா் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து ஊருக்குச் செல்வதற்காக தேசிய மையமாக்கப்பட்ட வங்கி அருகே நடந்து வந்தாா். அப்போது, இவரை வழிமறித்த 4 சிறுவா்கள் பணம், கைப்பேசியை பறித்துக் சென்றனா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட 3 சிறுவா்களை கைது செய்தனா். மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனா்.