வாகனம் மோதியதில் ஒருவா் மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், எடைக்கல் அருகே சாலையைக் கடக்க முயன்ற நபா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், எடைக்கல் காவல் நிலையத்துக்குள்பட்ட ஆசனூா் பகுதி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சுமாா் 50 வயது மதிக்கத்தக்க நபா் வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.