தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
வாகனம் மோதியதில் பாதயாத்திரை சென்ற இரு பெண்கள் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே வியாழக்கிழமை அதிகாலை திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவா்கள் மீது வாகனம் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகரைச் சோ்ந்த முனியசாமி மனைவி சாந்தி (50). அதே பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி (40). இவா்கள் உள்பட 18 போ் திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலுக்கு பாதயாத்திரையாக வியாழக்கிழமை அதிகாலை சென்றனா்.
திருப்பாலைக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் உப்பூா்- நாகனேந்தல் விளக்கு அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் இவா்கள் மீது மோதியது. இதில் சாந்தி, புவனேஸ்வரி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த முருகன் மனைவி நாகஜோதி (45) ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவலறிந்து சென்ற திருப்பாலைக்குடி போலீஸாா் உயிரிழந்த இருவரது உடல்கலையும் மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.