முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூலை 11 - 17) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
உடனிருப்போருக்கு உதவுவீர்கள். மனக் குழப்பங்கள் அகன்று, தெளிவுடன் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியமும், மன வளமும் மேம்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் குத்தகைப் பாக்கிகளை அடைப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மனமாற்றம் ஏற்படும். கலைத் துறையினருக்குப் பணவரவு உண்டு. பெண்களுக்கு உடன்பிறந்தோர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் எடுத்த காரியங்களில் சிறிது தாமதம் ஏற்படலாம்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
உடனிருப்போருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பாராத காரியங்கள் கைகூடும். உடனிருப்போரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அரசு ஆதரவும் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகள் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துகொள்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மனமாற்றம் ஏற்படும். கலைத் துறையினர் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். பெண்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்ப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 11.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் முக்கியத்துவம் பெறுவீர்கள். பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம் உயரும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகள் ஊழியர்களை மதித்து வேலை வாங்குவீர்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள்.
கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் செலவைக் குறைப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 12, 13.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
பயணங்களால் புகழ் அடைவீர்கள். தோற்றத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். உறவினர்கள் வழியில் நற்செய்திகள் கிடைக்கும். புதிய நட்புகள் உருவாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அலுவலர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டு. விவசாயிகள் நிலப் பிரச்னைகள் சாதகமாகும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களால் உதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் பிறர் மதித்து நடப்பார்கள். பெண்கள் உறவினர்களிடம் அன்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 14, 15.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
வருமானம் சீராக இருக்கும். சேமிப்புகளால் ஆதாயம் பெருகும். செயல்களை உற்சாகத்துடன் மேற்கொள்வீர்கள். தொழிலில் தடைகள் விலகும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் வளர்ச்சியைக் காண்பீர்கள். வியாபாரிகளின் இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும். விவசாயிகளுக்கு அரசு உதவிகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் மாற்றங்களை எதிர்கொள்வீர்கள். கலைத் துறையினருக்கு மனக் குழப்பங்களில் தெளிவு உண்டு. பெண்களுக்கு உடன்பிறந்தோர் ஆதரவாக இருப்பார்கள். மாணவர்களுக்கு உதவிகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - ஜூலை 16, 17,
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
பொருளாதார நிலை சீராக இருக்கும். புதிய நம்பிக்கை பிறக்கும். நெருக்கடி அளித்தவர்கள் விலகிவிடுவார்கள். மறைமுகத் திறமைகள் வெளிப்படும்.
உத்தியோகஸ்தர்கள் வேறு வேலைக்கு மாறுவீர்கள். வியாபாரிகள் முயற்சிகளில் பெரிய வருவாயைப் பெறுவீர்கள். விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகளின் பணிகளுக்கு மேலிட ஆதரவு உண்டு. கலைத் துறையினரின் எண்ணங்கள் ஈடேறும். பெண்கள் பிறர் செயல்களில் தலையிட மாட்டீர்கள். மாணவர்கள் தத்துவ விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
குழந்தைகளின் எண்ணங்களைச் செயல்படுத்துவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேன்மை அடையும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவான சூழ்நிலைகள்
ஏற்படும். வியாபாரிகள் இழுபறியான செயல்களையும் முடிப்பீர்கள். விவசாயிகளுக்கு திடீர் பண வரவு உண்டு.
அரசியல்வாதிகளின் சிந்தனைகள் செயலாக்கம் பெறும். கலைத் துறையினருக்கு பிறரிடம் நல்லிணக்கம் ஏற்படும். பெண்கள் உடன்பிறந்தோருடன் அன்பாக இருப்பீர்கள். மாணவர்கள் கெட்ட குணங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
குடும்ப நலம் மேன்மை அடையும். உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களால் மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு முயற்சிக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். கலைத் துறையினர் சூழல்களால் மகிழ்வீர்கள். பெண்கள் தங்கள் சிந்தனைகளில் மாற்றம் காண்பீர்கள். மாணவர்களுக்குப் பேச்சில் பொறுமையும், நிதானமும் தேவை.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
மருத்துவச் செலவுகள் குறையும். செயல்களில் பொறுப்பும் நிதானமும் இருக்கும். தீயவர்களின் நட்பைத் தவிர்ப்பீர்கள். உத்தியோகஸ்தர்
களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் சாதகமான சூழல் நிலவும். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். கலைத் துறையினரிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெண்களின் மனக் கவலைகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
வருமானம் பெருகச் சிந்திப்பீர்கள். குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரிகள் வெளிவட்டாரத்தில் கௌரவத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் பயணங்களால் எதிர்ப்புகள் நிறைவேறும்.
அரசியல்வாதிகள் உள்கட்சிப் பூசல்களைத் தவிர்ப்பீர்கள். கலைத் துறையினர் உற்சாகத்துடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பேச்சை குறைப்பீர்கள். பிரச்னைகளில் முடிவைக் காண்பீர்கள். குடும்பத்தினரை அரவணைத்துச் செல்வீர்கள். நேர்மையான சிந்தனைகள் பிறக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற, இறக்கமாக இருக்கும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். கலைத் துறையினர் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மதிப்பும் மரியாதையும் உயரும். முன்கோபமின்றி செல்படுவீர்கள். சந்தேகத்தை விட்டொழிப்பீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.
உத்தியோகஸ்தர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினர் ரசிகர்களுக்கு உதவுவீர்கள். பெண்களுக்கு விருந்தினர்களின் வருகை மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி பயில உதவிகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.