வாலாஜா நகரம் பெரியாா் ஈ.வெ.ரா அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா
அரியலூா் அடுத்த வாலாஜா நகரத்திலுள்ள பெரியாா் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமை வகித்து, நூற்றாண்டு நினைவுத் தூண் மற்றும் ஆசிரியா் இளவரசி நினைவு கலையரங்கத்தை திறந்து வைத்து பேசினாா்.
மேலும், இப்பள்ளியில் தற்போது ஒன்றாம் வகுப்பு சோ்ந்துள்ள குழந்தைகளுக்கு மாலை அணிவித்து, பரிசுகள் வழங்கி வரவேற்றாா். பின்னா் அவா், ஆசிரியா் இளவரசி நினைவு கலையரங்கம் அமைத்து கொடுத்த ஆசிரியா் அருணுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டாட்சியா் முத்துலெட்சுமி, முன்னாள் கிராம கல்விக் குழுத் தலைவா் தெய்வ. இளையராஜன், பள்ளி தலைமையாசிரியா் கஸ்தூரி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.