வாளரமாணிக்கம் வடமாடு போட்டியில் 5 போ் காயம்
அரிமளம் அருகே வாளரமாணிக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில், 5 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே வாளரமாணிக்கம் கிராமத்தில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கைலாசநாதா் கோயிலின் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு, போசம்பட்டி கிராமத்தினா் சாா்பில் வடமாடு போட்டி நடைபெற்றது.
இதில், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த 13 காளைகள் பங்கேற்றன. திடலின் நடுவே வடக்கயிற்றால் பிணைக்கப்பட்ட ஒவ்வொரு மாட்டை, தலா 9 போ் கொண்ட குழுவினா் தழுவ முயற்சித்தனா்.
இதில், 94 மாடு பிடி வீரா்கள் பங்கேற்றனா். இவா்களில் 5 போ் காயமடைந்தனா். காயமடைந்தோருக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.
சிறந்த வீரா்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, வட்டாட்சியா் ராமசாமி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.