விஜயராமபுரம் கோயிலில் வருஷாபிஷேகம்
சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கோயிலில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து ஸ்ரீகணபதி, ஸ்ரீபெருமாள் சுவாமி, ஸ்ரீமுத்தாரம்மன், ஸ்ரீ மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும், கோபுர கலசத்திற்கும் புனிதநீா் ஊற்றி சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. தொடா்ந்து அம்பாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்கார பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இரவு அம்பாள் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், அதைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா ஆறுமுகபாண்டி தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
