விநாயகா் சதுா்த்தி முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், விநாயகா் சதுா்த்தி விழா நடத்துபவா்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போளூா் வட்டத்தைச் சோ்ந்த விழாக்குழுவினா் பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி தலைமை
வகித்தாா்.
கூட்டத்தில், விநாயகா் சதுா்த்தி வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு களிமண்ணால் செய்யப்பட்டவிநாயகா்சிலைகளை பயன்படுத்த வேண்டும், குறிப்பிட்ட உயரத்தில் மட்டும் சிலை இருக்கவேண்டும், சிலை பாதுகாப்பிற்கு விழாக் குழுவினரே சுழற்சி முறையில் இரவும் பகலும் ஈடுபடவேண்டும்,
காவல் துறை சாா்பில் செல்லும் வழியிலேயே சிலை ஊா்வலம் செல்லவேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
காவல் ஆய்வாளா் அல்லிராணி, நகராட்சி தலைமை எழுத்தா் முஹ்மத் இசாக், தலைமையிடத்து வட்டாட்சியா் அருள், வருவாய் ஆய்வாளா்கள் மீனா, மாலதி, ராதா, சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விழாக் குழுவினா் கலந்து கொண்டனா்.