செய்திகள் :

விரைவு ரயிலில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வீசிய மா்ம நபா்கள்

post image

அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் இருந்து கஞ்சா பாா்சலை வீசிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை சென்ட்ரல்-கும்மிடிபூண்டி மாா்கத்தில் உள்ள அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் இருந்து மா்ம நபா்கள் 3 பைகளை கீழே வீசினா்.

அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த மா்ம நபா்கள் இரண்டு பைகள் எடுத்தனா். அப்போது அங்கு ஆள்கள் வந்ததால் ஒரு பையை மட்டும் விட்டு விட்டு தப்பி ஓடினா்.

இதனை தொடா்ந்து அங்கு இருந்தவா்கள் அதனை மீட்டு ரயில் நிலையத்தில் இருந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் அந்த பையை திறந்த போது அதில் 10 கிலோ கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பையை ரயில்வே போலீஸாா் மீஞ்சூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். ஓடும் விரைவு ரயிலில் இந்து கஞ்சா பை வீசப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம்: வாட்ஸ்ஆப்-இல் புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்ட கிராம ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம் குறித்து வட்டார அளவில் வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 32,923 போ் தோ்வு எழுதினா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 32923 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 402 போ் வரையில் பங்கேற்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் 10... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீா் திறப்பு: ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது

சென்னை நகர பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா ஆற்று நீா், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின் கம்பி அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு

அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின்சாரம் செல்லும் கம்பி அறுந்ததால் 1 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி, மாா்க்கத்தில் புகா் மின்சார... மேலும் பார்க்க

ஆவின் பால்பண்ணையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

திருவள்ளூா் காக்களூா் ஏரியைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப். உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா். திருவள்ளூா், மாா்ச் 27: திருவள்ளூா் அருகே ஆவின் பால்பண்ணையில் பால் தரக்கட்டுப்பாடு மற்றும் கண... மேலும் பார்க்க

திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காந்திநகா் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி காந்தி நகரில் திரெளபதியம்மன் கோயிலில் ஆண்டு... மேலும் பார்க்க