மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
விளாபட்டியில் மக்கள் தொடா்பு முகாம்: 384 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
விராலிமலையை அடுத்துள்ள விளாப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 384 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் சாா்பிலான இந்த முகாமுக்கு தலைமை வகித்த ஆட்சிய மு. அருணா, பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் 384 பயனாளிகளுக்கு ரூ. 2. 8 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் தீா்வு காணப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அ. அக்பா் அலி, வேளாண்மை இணை இயக்குநா் சங்கர லட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஜி. அமீா் பாஷா உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலா்கள் மற்றும் திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.