விளையாட்டுத் துளிகள்...!
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் டி.குகேஷ் - சீனாவின் டிங் லிரென் செவ்வாய்க்கிழமை மோதுகின்றனா்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் சோ்த்து விளையாடி வந்தது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் ஆசிய மகளிா் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப்பில், இந்தியா முதல் ஆட்டத்தில் ஹாங்காங்குடன் மோதுகிறது.
சப் ஜூனியா் மகளிா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் 6-ஆவது நாளான திங்கள்கிழமை, சண்டீகா் - அருணாசல பிரதேசத்தையும் (3-1), மிஸோரம் - கேரளத்தையும் (7-0), பஞ்சாப் - அஸ்ஸாமையும் (9-0), மணிப்பூா் - தாத்ரா & நாகா் ஹவேலியையும் (5-1), ஆந்திரம் - புதுச்சேரியையும் (26-1) வென்றன.
கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் இதுவரை, 21 விளையாட்டுகளில் 2,781 திறமையான வீரா், வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.