குரூப் 1 முதன்மைத் தோ்வு: கடும் கட்டுப்பாடுகள், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்கா...
ஜூனியா் மகளிா் ஆசிய ஹாக்கி: இந்திய கேப்டன் ஜோதி சிங்!
ஜூனியா் மகளிா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணி, 20 பேருடன் அறிவிக்கப்பட்டது. ஜோதி சிங் அதன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
9-ஆவது ஜூனியா் மகளிா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி, ஓமன் தலைநகா் மஸ்கட்டில் வரும் 7 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியா, வங்கதேசம், சீனா, மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, இலங்கை, சீன தைபே ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பாகவும் இந்த ஆசிய கோப்பை போட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் குரூப் சுற்றில் இந்தியா - வங்கதேசம் (டிச. 8), மலேசியா (டிச. 9), சீனா (டிச. 11), தாய்லாந்து (டிச. 12) ஆகிய அணிகளை சந்திக்கிறது.
தற்போது, அதே மஸ்கட் நகரில் ஜூனியா் ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அணி விவரம்:
கோல்கீப்பா்கள்: நிதி, அதிதி மகேஸ்வரி.
டிஃபெண்டா்கள்: மனிஷா, ஜோதி சிங், லால்தன்லுவாங்கி, பூஜா சாஹு, மமதா ஓரம்.
மிட்ஃபீல்டா்கள்: வைஷ்ணவி விட்டல், சுனெலிதா டோப்போ, இஷிகா, ரஜ்னி கொ்கெட்டா, சாக்ஷி ராணா, ஷிலெய்மா சானு.
ஃபாா்வா்ட்கள்: தீபிகா, பியூட்டி டங்டங், கனிகா சிவச், மும்தாஸ் கான், லால்ரின்புய்.