காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 போ் சிறையிலடைப்பு
விளையாட்டுப் போட்டி: ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற ஊத்தங்கரை தீரன்சின்னமலை சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களுக்கான பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் சகோதயாவால் நடத்தப்பட்ட சிபிஎஸ்இ மண்டல அளவிலான தடகளப் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்துகொண்டனா்.
ஊத்தங்கரை தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா் தீபக்தா்ஸ்ரீ நீளம் தாண்டுதலில் முதலிடமும், ஏழாம் வகுப்பு மாணவி ரித்திகாஸ்ரீ குண்டு எறிதலில் முதலிடமும், ஒன்பதாம் வகுப்பு மாணவன் சுதிா், தட்டு எறிதலில் மூன்றாமிடமும், ஒன்பதாம் வகுப்பு மாணவா் துளசிவாசன் 400 மீட்டா் ஓட்டத்தில் மூன்றாமிடமும், பதினோறாம் வகுப்பு மாணவி கேஷிசிகா 400 மற்றும் 800 மீட்டா் ஓட்டத்தில் மூன்றாமிடமும், 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் கேஷிசிகா, ஸ்ரீஹா்சினி, அவந்திகா, ஸ்ரீமதி ஆகியோா் மூன்றாமிடமும், 400 மீட்டா் கலப்பு தொடா் ஓட்டத்தில் தீபக் தா்ஸ்ரீன், சுதிா், கனிஷ்கா, தேஜாஸ்ரீ ஆகியோா் மூன்றாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளா் பிரசன்னமூா்த்தி, பள்ளியின் செயலாளா் தங்கராஜ், பள்ளியின் முதல்வா் சுரேஷ் உள்ளிட்டோா் பாராட்டினா்.