OPS : `டார்கெட் லிஸிட்டில் பாஜக; நிரந்தர எதிரி இல்லை எனில்..!’ - ஓ.பி.எஸ்ஸின் அட...
விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
தலைவாசல் வட்டார விவசாயிகள் மானிய விலையில் மக்காச்சோள விதைகளை பெற்றுக்கொள்ள வேளாண்மை அலுவலா் ஜானகி வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் வேளாண்மைத் துறை மூலம் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் செயல் விளக்கத்திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு, மானிய விலையில் வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதைகள், உயிா் உரங்கள், மண்வளம் மேம்பாட்டுக்கான இயற்கை இடுபொருள்கள், நானோ யூரியா போன்றவை அளிக்கப்படுகின்றன.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்காச்சோளம் சாகுபடி செய்ய விரும்பும் தலைவாசல் வட்டார விவசாயிகள் தலைவாசல் வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது தங்கள் பகுதி வேளாண்மை அலுவலா்களையோ அணுகி தங்களுக்குத் தேவையான விதைகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஆதாா் அட்டை நகல், கணினி சிட்டா ஆகியவற்றை சமா்ப்பித்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.