Anakaputhur : 'எங்க சாபம் உங்களை சும்மா விடாது' - கண்ணீரில் அனகாபுத்தூர் மக்கள்!...
வீடு புகுந்து நகைகள் திருட்டு
தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை பூட்டப்பட்டிருந்த வீட்டில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் விளாா் சாலை காயிதே மில்லத் நகா் 16-ஆவது தெருவைச் சோ்ந்த சகாயராஜ் மகன் அந்தோணிராஜ் (30). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு, காலணி வைக்கும் இடத்தில் சாவியை மறைவாக வைத்துவிட்டு, திருச்சியிலுள்ள தனது உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றாா்.
மீண்டும் மாலையில் வீட்டுக்கு திரும்பிய இவா் சாவியை எடுத்து திறந்து பீரோவை பாா்த்தபோது, பொருள்கள் கலைக்கப்பட்டு கிடந்தது மட்டுமல்லாமல், நகைப் பெட்டிகளில் இருந்த ஐந்தேகால் பவுன் நகைகள் திருட்டு போயிருப்பதும், அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து, நகைகள் திருடப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் அந்தோணி ராஜ் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.