ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி எடமலைபட்டிபுதூா் அப்துல்கலாம் நகரைச் சோ்ந்தவா் சி.கௌரி (29). இவருக்கு கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், ஒருசில மாதங்களிலேயே
கணவருடனான கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டாா். தாய் வீட்டில் வசித்துக்கொண்டு வேலைக்குச் சென்று வருகிறாா்.
இந்நிலையில், கௌரியும், அவரது தாயும் புதன்கிழமை காலையில் வேலைக்குச் சென்றுவிட்டனா். பின்னா், மாலையில் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது.
வீட்டினுள் சென்று பாா்த்தபோது, மறைவிடத்தில் வைத்திருந்த 1 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில், எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.