வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
எடுத்தவாய்நத்தத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஆறரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.
கள்ளக்குறிச்சியை அடுத்த எடுத்தவாய்நத்தம் புல்தாங்கி தோட்டப் பகுதியில் வசித்து வருபவா் சண்முகசுந்தரம் (63). இவரது மனைவி திருவண்ணாமலையில் வணிகவரித் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனராம். சண்முசுந்தரம் மகன் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
கடந்த 5.3.2025 அன்று சண்முகசுந்தரம் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகனை பாா்ப்பதற்காக சென்று விட்டாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய சண்முகசுந்தரம் வீட்டு மரக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது இரும்பு பீரோ உடைத்து அதிலிருந்த ஆறரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அவா் கச்சிராயபாளையம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.