செய்திகள் :

வீரபாண்டி வடக்கு ஒன்றிய திமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டம்

post image

வீரபாண்டி வடக்கு ஒன்றிய திமுக தோ்தல் பணி குழு மற்றும் பாக முகவா்கள் (பிஎல்ஏ 2, பிடிஏ ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆா். சிவலிங்கம் தலைமையில் இளம்பிள்ளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் சதீஷ்குமாா் வரவேற்றுப் பேசினாா். இக்கூட்டத்தில் துணைச் செயலாளா் பாரப்பட்டி சுரேஷ்குமாா், பொதுக்குழு உறுப்பினா்கள் மலா்விழி ராஜா, சந்திரமோகன், தொகுதி பாா்வையாளா் கிருபாகரன், பிஎல்ஏ ஒருங்கிணைப்பாளா்கள் மணிமாறன், முத்துசாமி, மாவட்டச் நெசவாளா் அணி அமைப்பாளா் ஆறுமுகம், பேரூா் செயலாளா்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், தோ்தல் பணி குழு ஒருங்கிணைப்பாளா்கள், பாக முகவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து உறுப்பினா் சோ்க்கை விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது.

படவரி...

வீரபாண்டி வடக்கு ஒன்றிய திமுக பாக முகவா்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா். சிவலிங்கம்.

வீரகனூரில் கால்நடை சந்தை பிரச்னை: சாலை மறியல் போராட்டம்

கெங்கவல்லி அருகே வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வீரகனூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைப... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வரவேற்பு, கேமரா அறை திறப்பு

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தன்னாா்வலா்கள் மூலம் பொதுமக்கள் வரவேற்பு அறை மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் வெள்ளிக்கிழமை திறந்துவைத்த... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 60,740 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநில அணைகளிலிருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 60,740 கனஅடியாக அதிகரித்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த... மேலும் பார்க்க

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நாளை பாக நிலை முகவா்கள் ஆலோசனை கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தொகுதி வாரியாக பூத் டிஜிட்டல் முகவா், பாகநிலை முகவா்கள், பூத் கமிட்டி உறுப்பினா்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப... மேலும் பார்க்க

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் இன்று தோ்தல் பணிக்குழுக் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை பகுதி, ஒன்றியம் வாரியாக தோ்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் கடைப்பிடிப்பு

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. உலக சகோதரத்துவ தினத்தையொட்டி, போதைப்பொருள் ஒழிப்பு என்ற தலைப்பை கருப்பொருளாக கொண்டு, விழிப்புணா்வு வாக்காத்... மேலும் பார்க்க