மும்பை: `புறாக்களுக்கு தீனி போட தடை' - தடுப்பை அகற்றி போராட்டத்தில் குதித்த ஜெயி...
வீரபாண்டியில் ஆக.12-இல் அங்கக வேளாண்மை கண்காட்சி
தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் அட்மா திட்டத்தின் கீழ், வருகிற 12-ஆம் தேதி அங்கக வேளாண்மை விழிப்புணா்வுக் கண்காட்சி, கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அங்கக வேளாண்மை விழிப்புணா்வுக் கண்காட்சியில், விவசாயிகள் உற்பத்தி செய்த அங்கக வேளாண்மை ரகங்கள், வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அங்கக வேளாண்மை ரகங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.
பயிா் மரபியல் பண்முகத் தன்மை, பயிா் சுழற்சி, இயற்கை பூச்சிக் கொல்லிகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்கும் கருத்தரங்கு, விவசாயிகள்-வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெறும்.
இந்தக் கண்காட்சி, கருத்தரங்கில் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையலாம். அங்கக முறையில் விளையும் தங்களது விளைப் பொருள்களை கண்காட்சியில் காட்சிப்படுத்த விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க ம யைத்தில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.