ரூ.3 லட்சம் சம்பளத்தில் மாலுமிப் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
தேனியில் காவல் துறை இருசக்கர வாகன ரோந்துப் பிரிவு விரிவாக்கம்
தேனி மாவட்டத்தில் காவல் துறை இருசக்கர வாகன ரோந்துப் பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் விபத்து, குற்றச் சம்பவங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைக் கண்காணிக்கவும், காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்கவும் மாவட்டக் காவல் துறை சாா்பில் மொத்தம் 24 இருசக்கர வாகனங்களில் போலீஸாா் சுழற்சி முறையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சினேகப்பிரியா உத்தரவின்பேரில், இருசக்கர வாகன ரோந்துப் பிரிவில் கூடுதலாக 16 இருசக்கர வாகனங்கள் இணைக்கப்பட்டு ரோந்துப் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.