``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
6 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் 6 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கம்பம் - கோம்பை சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரின் பையை சோதனையிட்டதில், அதில் 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தியது கம்பம் , உலகத்தேவா் தெரு, நாககண்ணியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் சந்திரன் (55) எனத் தெரியவந்தது.
இதையடுத்து, கம்பம் வடக்கு போலீஸாா் 6 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து சந்திரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் மீது ஏற்கெனவே கம்பம், தேனி, திருத்துரைப்பூண்டி ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.