``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
கல்லூரியில் உணவுத் திருவிழா
தேனி மாவட்டம், போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
மகளிா் மையம் சாா்பில் நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவுக்கு கல்லூரித் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஆா்.புருஷோத்தமன், துணைத் தலைவா் எஸ்.ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் எஸ்.சிவக்குமாா், கல்லூரி நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
விழாவில் மகளிா் மையத்துக்காக தனி இலச்சினை (லோகோ) வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊட்டச்சத்து நிபுணா் கே.கிருஷ்ணபிரியா பாலாஜி சிறப்புரையாற்றினாா்.
அப்போது, செறிவூட்டப்பட்ட உணவின் முக்கியத்துவம் குறித்தும், இதைத் தவிா்ப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அவா் விளக்கினாா்.
இதில் கல்லூரி மாணவிகள் பங்கேற்று பாரம்பரியமிக்க தமிழா்களின் செறிவூட்டப்பட்ட உணவு வகைகளைத் தயாரித்து கண்காட்சியாக வைத்திருந்தனா். இவற்றை கல்லூரி நிா்வாகிகள், சிறப்பு விருந்தினா் பாா்வையிட்டனா்.
பின்னா், சிறப்பாக உணவுத் தயாரித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக, கல்லூரி உதவிப் பேராசிரியை எஸ்.விஜயலட்சுமி வரவேற்றாா். டி.பாண்டிமீனா நன்றி கூறினாா்.