``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
ஓராண்டாகியும் திறக்கப்படாத புதிய நியாய விலைக் கடை
போடி ரெங்கநாதபுரத்தில் புதிதாக நியாய விலைக் கட்டடம் கட்டி ஓராண்டாகியும் திறக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குள்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் வாடகைக் கட்டடத்தில் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. 3, 7, 8, 9 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த நியாய விலைக் கடையில் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நியாய விலைக் கட்டடம் சிறிதாத இருப்பதால் அதிகளவில் பொருள்கள் வைக்க இயலாமல் செயல்பட்டு வந்தது. இதையடுத்து, பொதுமக்கள் கோரிக்கையின்பேரில் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து புதிய நியாய விலைக் கடைக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓராண்டுக்கு முன் ரூ. 13 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலைக் கட்டடம் தற்போது வரை திறக்கப்படவில்லை.
இதுகுறித்து போடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி வீரராஜ் கூறுகையில், புதிய நியாய விலைக் கட்டடம் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பொருள்களை வாங்க இரண்டு, மூன்று முறை வரவேண்டியுள்ளது. அரசுக்கும் வாடகையிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், புதிய நியாய விலைக் கட்டடத்தை உடனடியாகத் திறக்க கூட்டுறவுத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.