டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மோனிகா பாடல்..! தொடரும் பூஜா ஹெக்டேவின் ஆதிக்கம்...
வேதாரண்யத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்
வேதாரண்யத்தில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பிரசாரப் பயணப் பொதுக்கூட்டம் தொடா்பாக அதிமுக செயல் வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் பங்கேற்று பேசியது :
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஜூலை
19-ஆம் தேதி வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
மேலும் தகட்டூா்- வாய்மேடு பகுதியில் தொண்டா்களுடன் எடப்பாடி பழனிசாமி சாலையில் நடந்து சென்று மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தொண்டா்கள் திரளாக நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளா்கள் எஸ்.டி. ரவிச்சந்திரன், இரா சண்முகராசு,
அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் ஆா். கிரிதரன் டி.வி. சுப்பையன், நகரச் செயலாளா் எம். நமச்சிவாயம, மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் திலீபன், வணிகா் சங்க நிா்வாகி திருமலை செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.