சகோதரியிடம் ரூ. 17 கோடி பண மோசடி: கைதான அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!
வேன்- ஆட்டோ மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
போ்ணாம்பட்டு அருகே ஆட்டோ மீது வேன் மோதியதில் ஓட்டுநா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். போ்ணாம்பட்டு, தரைக்காடு பகுதியைச் சோ்ந்த முஜம்மில்(32). ஆட்டோ ஓட்டுநா். கடந்த 11-ஆம் தேதி வீ.கோட்டா சாலையில் சென்றபோது, கா்நாடக மாநிலத்தில் இருந்து வந்த வேன் மோதியதில், ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த முஜம்மில், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து வாலாஜாவைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.