வேன் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்
குடவாசல் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 3 போ் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.
சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியா் சங்க உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பதற்காக, திருவாரூரில் இருந்து சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை காலை 17 பேரை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் சாலையில் அரசவனங்காடு பகுதியில் வேன் சென்றபோது மழை காரணமாக, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த அனைவரும் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினா். திருவாரூா் மாவட்டத் தலைவா் பி.என். லெனின் மற்றும் பாலசுப்பிரமணியன், பழனிவேல் ஆகிய 3 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுகுறித்து குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.